திருப்புத்தூர் அருகே திருமண ஆசைகாட்டி பிளஸ் 2 மாணவியை கடத்திய பெயின்டர் போக்சோவில் கைது

திருப்புத்தூர், ஜன. 28: திருப்புத்தூர் அருகே திருமண ஆசைகாட்டி பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்ற பெயின்டரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருப்புத்தூர் அருகே ஆலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் திரவியம். இவரது மகன் கிளின்டன் (20). பெயின்டர். இவர் இதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியை காதலித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த டிச.27ம் தேதி மாணவி பாண்டிச்சேரிக்கு கிளின்டன் அழைத்து சென்றுள்ளார். பல இடங்களில் தேடியும் மாணவியை காணாததால் அவரது தாய் நாச்சியாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கிளின்டன் மாணவியுடன் பாண்டிச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது தெரியவந்தது. இதையடுத்து பாண்டிச்ேசரி சென்ற போலீசார் இருவரையும் ஆலங்குடி அழைத்து வந்தனர். மைனர் பெண் என்பதால் மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கிளின்டனை கைது செய்தார்.

Related Stories:

>