வடமதுரையில் திமுகவில் இணைந்த அதிமுகவினர்

வேடசந்தூர், ஜன. 28: வடமதுரையில் பேரூர் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னதாக மோர்பட்டி ஊராட்சியில் இருந்து சுமார் 100 மேற்பட்ட அதிமுகவினர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, நகர செயலாளர் கணேசன், வடமதுரை ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், விராசாமிநாதன், கவிதா பார்த்திபன், ரவிசங்கர், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். திமுக சார்பில் அவர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. பேரூர் செயலாளர் கணேசன் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories:

>