×

ஒட்டன்சத்திரத்தில் அனைவருக்கும் வீடு திட்ட விழிப்புணர்வு பிரசாரம்

ஒட்டன்சத்திரம், ஜன. 28: தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தாங்களாகவே வீடு கட்டும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதற்கு பயனாளிகள் சொந்தமாக வீடு கட்டுவதற்கான இடத்தின் நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட பத்திரம் அல்லது பட்டா வைத்திருக்க வேண்டும். வீடு கட்டி கொள்ளும் பயனாளிகள் தங்களது இடத்தில் குறைந்தது 300 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டி கொள்ள மத்திய அரசின் மானியமாக ரூ.1.50 லட்சம் மற்றும் மாநில அரசின் மானியமாக ரூ.60 ஆயிரம் என மொத்தமாக ரூ.2.10 லட்சம் நான்கு தவணைகளில் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் இத்திட்டத்தின்படி ரூ.9.78 காடி மதிப்பீட்டில் 326 குடும்பங்கள் பயன்பெற அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் 94 குடும்பங்களின் வீடுகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்திட்டத்தின் பயனடைந்த பயனாளிகள் சமூக மேம்பாட்டிற்காக அங்கீகார் என்ற விழிப்புணர்வு திட்டம் இந்திய தேச தந்தை மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளன்று துவக்கப்பட்டது. இத்திட்டத்தில் உள்ள 8 வகையான மேம்பாட்டு திட்டங்களை பற்றி பயனாளிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி Angikaar Resource Personஐ கொண்டு தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை நகராட்சி ஆணையாளர் தேவிகா துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வாரிய பொறியாளர், நகராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Home Planning Awareness Campaign ,
× RELATED சாலை விபத்தில் நிதி நிறுவன ஊழியர் பலி