கடத்தூரில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை தொடங்கியது

கடத்தூர், ஜன.28: கடத்தூர் பகுதியில் அறுவடை தொடங்கப்பட்ட நிலையில், மரவள்ளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கடத்தூர் அடுத்த குருபரஹள்ளி, மணியம்பாடி, சிந்தல்பாடி புட்டிரெட்டிபட்டி பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளியை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக போதிய மழையில்லாததால் செடிகள் வளர்ச்சி இன்றி காணப்பட்டது. தற்போது அறுவடை துவங்கி உள்ள நிலையில், மரவள்ளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நடவு கூலி, ஆட்கள் கூலி, உரம் என ஏக்கருக்கு ₹40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.  ஆனால், மரவள்ளி குவிண்டாலுக்கு ₹19,500 மட்டுமே விலை கிடைக்கிறது. இது அறுவடைக்கு கூலிக்கே சரியாகி விடுகிறது. எனவே, அரசு மரவள்ளிக்கான விலையை அதிகரிக்கவும், கடத்தூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு ஆலை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories:

>