×

அரசு பள்ளிக்கு பெஞ்ச், டெஸ்க் வழங்கல்

அரூர், ஜன.28: அரூர் சட்டமன்றத்திற்குட்பட்ட காளிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து, 51 செட் பெஞ்ச் மற்றும் டெஸ்க்குகள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் செந்தில் இதனை பெற்றுக்கொண்டார். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெஞ்ச் மற்றும் டெஸ்க்குகள் இல்லாத நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள இருக்கைகளால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எம்எல்ஏ சம்பத்துக்கு தலைமை ஆசிரியர் செந்தில் நன்றி தெரிவித்தார்.

Tags : Government School ,
× RELATED பொருட்களை திருட முயன்ற மர்ம நபர் கீழே விழுந்து சாவு