ஊட்டி, ஜன. 23:நீலகிரி மாவட்ட நிர்வாகம், ஊட்டி வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஊரக வாழ்வாதார (மகளிர் திட்டம்) இயக்கத்துடன் இணைந்து வரும் 25ம் தேதி குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் வடிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாவட்ட நிர்வாகம், ஊட்டி வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஊரக வாழ்வாதார (மகளிர் திட்டம்) இயக்கத்துடன் இணைந்து வரும் 25ம் தேதி குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 10ம் வகுப்பு தேறிய, தவறிய, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் முதுகலை படித்த வேைலவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில், 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.
இந்த சிறப்பு முகாம் வரும் 25ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவிருக்கும் இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக் கொள்ளலாம். உரிய காலத்தில் புதுப்பித்து வந்தால் அரசு வேலை வாய்ப்பினையும் பெற்றுக் கொள்ளலாம்.இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் முற்றிலும் இலவசம். வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 0423 2444004 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.