×

சிவகாசியில் பொதுமருத்துவ முகாம்

சிவகாசி, ஜன.23: சிவகாசியில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சிவகாசி வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் இலவச கண் பரிசாதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, சிவகாசி வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் இலவச கண் பரிசாதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. வட்டார போக்குவரத்து அலவலர் மூக்கன் தலைமை வகித்தார். ஆய்வாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். சிவகாசி அணில் கண் மருத்துவமனை டாக்டர் அணில்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொழிலாளர்கள், டிரைவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். சிவகாசி பாண்டியன் ஹார்ட் ஸ்பெஷாலிட்டி கிளினிக்கை சேர்ந்த மருத்துவ குழுவினர், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதனை செய்தனர். 300க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Tags : amnesty camp ,Sivakasi ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி