- தேசிய இளைஞர் தினம்
- ஸ்ரீவில்லிபுத்தூர்
- ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம்
- கலசலிங்கம் சட்டக் கல்லூரி
- மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்
- டாக்டர்
- சசி ஆனந்த்
- துணை
- நாராயணன்
- வாசுதேவன்…
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜன.10: ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் கலசலிங்கம் சட்டக்கல்லூரி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு உடன் இணைந்து தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி துணைத்தலைவர் முனைவர் சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் முனைவர் நாராயணன், பதிவாளர் முனைவர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினர்.
துறை தலைவர் பாரதி வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி அகிலாதேவி, துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் கார்த்தீஸ்வரன் ஆகியோர் போக்சோ சட்டம், போதைப் பொருள் பற்றியும், சமூக ஒற்றுமையில் இளைஞர்களின் பங்கு பற்றியும் பேசினர். சட்ட உதவி மையத்தில் பயிற்சிக்கு சென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை நீதிபதி வழங்கினார். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
