×

பிரதோஷ வழிபாடு

தர்மபுரி, ஜன.23: 0தர்மபுரி ட்டை கல்யாண காமாட்சி மல்லிகார்ஜூனசுவாமி கோயிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, மாலை 4 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5 மணிக்கு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து  மாலை 5.45 மணிக்கு நந்தி வாகனத்தில் மல்லிகார்ஜூனசுவாமி பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதே போல் அரூர், பாப்பிரெட்டிபட்டி, கடத்தூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள சிவாலயங்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Tags : Pratosh ,
× RELATED பிரதோஷ வழிபாடு