பைக்குகள் மோதி வாலிபர் சாவு

மதுரை, ஜன.22: மதுரையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை சம்மட்டிபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன் மகன் கார்த்திக் (37), இவர் தேனி மெயின் ரோட்டில் காளியம்மன் கோயில் அருகில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது டூவீலரும், எதிரே தேனூர் வாசுகி தெருவை சேர்ந்த கோபுரசாமி மகன் சதீஷ் (22) என்பவர் ஓட்டி வந்த டூவீலரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார்த்திக் தலையில் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு (3) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bikers ,death ,
× RELATED ஏடிஜிபியாக பதவி உயர்வு மதுரை கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு