×

பிட் இந்தியா சைக்கிள் பேரணி

திண்டுக்கல், ஜன. 22: இந்தியாவின் தலைசிறந்த ஹாக்கி வீரர் தயான் சந்திரன் பிறந்தநாள் தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. தயான் சந்திரனின் 114வது பிறந்த நாளில் ‘ஃபிட் இந்தியா’ திட்டம் தொடங்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்திலிருந்து சைக்கிள் பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தொடங்கி வைத்து தானும் சைக்கிளை ஓட்டி சென்றார். இதில் 90 போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இப்பேரணியில் உடல் ஆரோக்கியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : Pitt India Bicycle Rally ,
× RELATED சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்