×

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தெருக்கூத்து நாடகம் மூலம் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி, ஜன.22: பர்கூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தி தெருக்கூத்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பர்கூர் வாரச்சந்தையில் நேற்று 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்வது தொடர்பாக தெருக்கூத்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தாசில்தார்கள்  பர்கூர் சித்ரா, போச்சம்பள்ளி முனுசாமி தலைமை வகித்தனர். தேர்தல் துணை தாசில்தார்கள் சிதம்பரம், ஜெகதீசன், பர்கூர் வருவாய் ஆய்வாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெருக்கூத்து நாடக கலைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்தும், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் குறித்து பொதுமக்களுக்கு நாடகம் மூலம் விளக்கமளித்தனர். இதற்காக விண்ணப்ப படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ பூர்த்தி செய்வது வாக்குச்சாவடி மையங்களில் அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா