×

லளிகம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுக்கு பின்பு சந்திப்பு

தர்மபுரி, ஜன.22: லளிகம் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1982ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. ரவிசங்கர் வரவேற்றார். டாக்டர் மணிவண்ணன் தலைமை வகித்தார். உதயகுமார், தனம், சரவணன், வெங்கட சுப்ரமணியன், கோவிந்தராஜ், இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணிக்கம், ரங்கநாதன், செந்தமிழ்ச்செல்வி, தங்கம்மாள், தனசேகரன், சீனிவாசன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இதையடுத்து, ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும் முன்னாள் மாணவர்கள், மாணவிகள் தங்களது நண்பர்களுடன் குரூப் போட்டோ மற்றும் செல்பி போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடந்தது. ஜார்ஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் செந்தில்நாதன் உள்ளிட்ட ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags : Alumni ,Lalikam Government School ,
× RELATED பெண்களை மதிக்க வீடுகளில்...