×

ஜம்மணஅள்ளி அரசு பள்ளியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி அரூர், ஜன.22: ஜம்மணஅள்ளி அரசு பள்ளியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது.

அரூர் ஒன்றியம் ஜமமணஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கொளகம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியிலிருந்து 20 மாணவர்கள் ஜம்மணஅள்ளி பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்களை இப்பள்ளி மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இரு பள்ளி மாணவர்களும் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் மாணவர்களை உற்சாகப்படுத்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மேலும், பள்ளி ஆய்வகத்தில் உள்ள அறிவியல் மாதிரிகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மதிய உணவிற்கு பின்னர் தென்கரைக்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த கோயில் சிற்பங்களை பார்வையிட்டனர். காலை முதல் மாலை பள்ளி முடியும் வரை கொளகம்பட்டி பள்ளி மாணவர்கள் ஜம்மணஅள்ளி பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டனர். இதில் ஜம்மணஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், உதவித் தலைமை ஆசிரியர் அருள்முருகன், கொளகம்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, ஆசிரியர்கள் தமிழ்ஞானவள்ளி, சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து 24ம் தேதி இப்பள்ளி மாணவர்கள் கொளகம்பட்டி பள்ளிக்கு செல்ல உள்ளனர்.

Tags : government school ,
× RELATED நீட் தேர்வில் சாதனை கறம்பக்குடி அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு