×

தோகைமலை அருகே டூவீலர்கள் மோதலில் கல்லூரி மாணவர் பலி

தோகைமலை, ஜன. 21: தோகைமலை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் இறந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் உள்ள ஆளிப்பட்டி அருகே மணிக்கட்டியூரை சேர்ந்தவர் முருகேசன் மகன் சக்திவேல்(20). இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிஎம்இ படித்து வந்தார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக மணப்பாறை- குளித்தலை மெயின்ரோட்டில் குளித்தலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சக்திவேல் சென்றார். அப்போது கே.துறையூர் அருகில் அதே ரோட்டில் எதிரே வந்த தோகைமலையை சேர்ந்த பெரியதம்பி மகன் பொன்சங்கர்(24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய சக்திவேல் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்தார். இது குறித்து சக்திவேலின் தந்தை முருகேசன் அளித்த புகாரின்பேரில் பொன்சங்கர் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : College student ,clash ,Tuvaluers ,Dohakaimalai ,
× RELATED மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில்...