×

சகோதரர்களிடையே வியாபார போட்டி வைரலாகும் நகைக்கடை நோட்டீஸ்

ஈரோடு, ஜன. 14: ஈரோடு மாவட்டம் அந்தியூர் ராஜவீதியில் ஏராளமான நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைக்காரர்களிடையே தொழில் போட்டி இருந்து வரும் நிலையில் ஒரு நகைக்கடைக்காரர் தனது கடைக்கு ஆட்கள் தேவை எனக் கூறி துண்டறிக்கை ஒன்றை அச்சடித்து பொதுமக்களிடையே விநியோகித்துள்ளார். அதில், தனது கடைக்கு இன்டர்வியூவுக்கு வருபவர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் சில வாசகங்களையும் அச்சடித்துள்ளார்.
கடையின் பெயர், முகவரி, போன் நம்பர் உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு இருப்பதோடு, அருகில் உள்ள நகைக்கடைக்காரரின் வியாபார போட்டியை விளக்கும் வகையில் அந்த நோட்டீஸில், ராஜவீதி, போலீஸ் ஸ்டேஷன் வழியாக வரும்போது முன் கடைக்காரர் நம் கடை தெரியாமல் இருப்பதற்காக போர்டு வைத்திருப்பார். அந்த மறைவு தாண்டி வரவும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரித்தபோது நோட்டீஸ் அச்சடித்து வெளியிட்டுள்ள நகைக்கடை உரிமையாளரும், அருகில் உள்ள நகைக்கடை உரிமையாளரும் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.

Tags : brothers ,
× RELATED தட்டார்மடம் செல்வன் சகோதர்கள் இரண்டு...