×

பெரம்பலூரில் சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு

பெரம்பலூர், ஜன. 14: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் சப்.இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதில் 134 பேர் பங்கேற்றனர். 11 பேர் தேர்வெழுத வரவில்லை. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் முதல் நாளான நேற்று முன்தினம் நேரடியாக சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட அளவில் தேர்வுக்காக விண்ணப்பித்த 1,069 பேர்களில் 631 ஆண்கள், 131 பெண்கள் என மொத்தம் 762 பேர் கலந்து கொண்டனர். 307 பேர் தேர்வெழுத வரவில்லை. இந்த தேர்வை தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஐஜி தமிழ்சந்திரன், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் 2ம் நாளான நேற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் சப்.இன்ஸ்பெக்டர் பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு, அதே கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த தேர்வுக்காக பெரம்பலூர் மாவட்ட அளவில் விண்ணப்பித்திருந்த 145 பேர்களில் 134 பேர் எழுத்து தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதினர். 11 பேர் தேர்வுக்கு வரவில்லை. இந்த தேர்வு மையத்தை நேற்றும் தமிழ்நாடு சிறப்புக்காவல் படையின் ஐஜி தமிழ்சந்திரன், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பெரம்பலூர் டிஎஸ்பிக்கள் கென்னடி, (ஆயுதப்படை) ரவி மற்றும் இன்ஸ்பெக்டர் (தனிப்பிரிவு) வனிதா, நித்யா, கலையரசி உடனிருந்தனர்.

Tags : promotion ,Perambalur ,Sub Inspector ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி