×

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வலங்கைமான்,ஜன.14: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே அரசு ஊழியர் சங்கத்தினர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போது அச்சுறுத்தலில் ஈடுபட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள் மீது அச்சுறுத்தும் விதமாக சிலர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமிழ அரசு ஊழியர் சங்க வலங்கைமான் வட்ட துணைத் தலைவர் செல்வம் தலைமையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 12 பெண் அலுவலர்கள் உள்ளிட்ட 25 பேர் பங்கேற்றனர்.

Tags : Public Employees Union ,
× RELATED திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் 22ம் தேதி திருவிழா துவக்கம்