×

திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளிலும் தமிழர் திருநாளை முன்னிட்டு கோலப்போட்டிகள்: கோலங்களை நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்

திருவண்ணாமலை, ஜன.13: திருவண்ணாமலை நகரில் உள்ள 39 வார்டுகளிலும் தமிழர் திருநாளை முன்னிட்டு கோலப்போட்டிகள் நடைபெறவுள்ளது. போகியன்று இரவு போடப்படும் கோலங்களை நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். இதுகுறித்து, முன்னாள் அமைச்சரும், அருணை தமிழ் சங்க தலைவருமான எ.வ.வேலு எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலையில் அருணை தமிழ் சங்கம் தமிழர் திருநாள் விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரம் 39 வார்டுகளிலும் கோலப்போட்டிகள் நடத்தி வருகிறது. அதன்படி, நாளை (14ம் தேதி) போகியன்று இரவு 10 மணி முதல் 12 மணி வரை அதாவது போகி பொங்கல் இரவில் போடப்படும் கோலங்களை நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

திருவண்ணாமலை நகரின் 39 வார்டுகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வார்டிற்கும் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு மற்றும் 5 ஆறுதல் பரிசுள் ஆகிய எட்டு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ₹6 ஆயிரம் மதிப்புள்ள 24 இன்ச் எல்இடி டிவி, இரண்டாம் பரிசு ₹3 ஆயிரம் மதிப்புள்ள மிக்ஸி, மூன்றாம் பரிசு ₹2 ஆயிரம் மதிப்புள்ள கேஸ் அடுப்பு, மற்றும் ஆறுதல் பரிசு ஒவ்வொரு வார்டிற்கும் 5 நபர்களுக்கு ₹1,500 மதிப்புள்ள ஜுஸ் மேக்கர் வழங்கப்படும். பரிசுகள் வருகிற 21ம் தேதி அன்று நடைபெறவுள்ள அருணை தமிழ் சங்க தமிழர் திருநாள் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி வழங்குகிறார். ஒவ்வொரு வார்டிற்கும் தனித்தனியே நடுவர் குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : city ,Thiruvannamalai ,Tamil Nadu ,umpires ,
× RELATED இலவச பாடப்புத்தகங்களை வழங்க ஏற்பாடு...