×

சிலால் கிராமத்தில் மாநில கபடி போட்டி

தா.பழூர், ஜன. 13: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் தஞ்சை, திருச்சி, திருநெல்வேலி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கபடி வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில் 16 அணிகள் 2 சுற்றுகளாக பங்கு பெற்றன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு, கோப்பைகள் வழங்கப்பட்டது.
போட்டியில் தோல்வியடைந்த அணிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. போட்டியை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்திருந்தனர்.

Tags : State ,Kabaddi Competition ,Chilal Village ,
× RELATED புதுச்சேரி பாஜகவில் உச்சக்கட்ட மோதல்;...