×

பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஒன்றியக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

பெரம்பலூர், ஜன.13: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் ஒன்றியக் குழுவில், மொத்தமுள்ள 14 இடங்களில் 9வார்டு களைத் திமுக கைப்பற்றியது. இந்நிலையில் துறை மங்கலம் ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) லதா தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், முரளிதரன் ஆகி யோர் முன்னிலையில் நடந்த மறைமுகத் தேர்த லில், ஒன்றியக் குழுத்த லைவராக மீனா(எ) மீனாம்பாள் அண்ணாதுரை, துணைத் தலைவராக சாந்தா தேவிகுமார் ஆகியோர் போ ட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

இதேபோல் வேப்பந்தட்டை ஒன்றியக்குழுவில் மொத்தமுள்ள 21இடங்களில் 12 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வேப்பந்தட்டை ஒன்றிய அலுவலகக் கூட்ட மன்றத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஊராட்சி செயலாளர் உமாமகேஸ்வரி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இமயவரம் பன், அறிவழகன் முன்னி லையில் நடந்த மறைமுகத் தேர்தலில், ஒன்றியக்குழு தலைவராக நூத்தப்பூர் ராமலிங்கம், துணைத் தலைவராக வெங்கனூர் ரெங்கராஜ் ஆகியோர் போட்டியின்றித் தேர்வுசெ ய்யப்பட்டனர்.

வேப்பூர் ஒன்றியக்குழுவில் மொத்தமுள்ள 23 இடங்களி ல் 12 வார்டுகளை திமுக. கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வேப் பூர் ஒன்றிய அலுவலகக் கூட்டமன்றத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவித்திட்ட அலுவலரான நாகரத்தினம் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேஸ்வரன், மரியதாஸ் ஆகியோர் முன்னி லையில் நடந்த மறைமுக தேர்தலில், ஒன்றியக் குழுத்தலைவராக பிரபா செல் லப்பிள்ளை, துணைத் தலைவராக விசிக கட்சியை சேர்ந்த செல்வராணி வரதராஜ் ஆகியோர் போட்டியின்றிதேர்வு செய்யப்பட்டனர்.

Tags : DMK ,Perambalur ,Vepur Union Committee ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி