×

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் விரைவில் பார்க்கிங் சேவை தொடங்கும்: அதிகாரி தகவல்

சென்னை: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் அமைக்கும் பணி முடிவடைந்ததையடுத்து விரைவில் சேவை தொடங்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னையில் 45 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் முதல் திட்டம் செயல்பட்டு வருகின்றது. வண்ணாரப்பேட்டையுடன் முடியும் இத்திட்டத்தில் தினம்தோறும் 1 லட்சம் பேர் வரையில் பயணம் செய்து வருகின்றனர். விரைவு சேவையில் மிகவும் முக்கியமான ஒன்றாக மெட்ரோ ரயில்வே திகழ்கிறது.

எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர் உள்ளிட்ட 23 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இதில் 17 நிலையங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி உள்ளது. சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை தினம்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இந்த நிலையத்தில் பார்க்கிங் வசதி அமைத்துத்தர வேண்டும் என பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதையேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பூமிக்கடியில் பார்க்கிங் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இந்த பணி முழுமையாக முடிந்துள்ளதாகவும், விரைவில் இச்சேவை பயணிகளின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், பூமிக்கடியில் பிரமாண்ட வாகன நிறுத்தம் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 100 கார்களை நிறுத்தும் அளவிற்கு இடவசதி உள்ளது. அதற்கு ஏற்றார் போல் உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பைக்குகள் நிறுத்தலாம் என்பது குறித்து இதுவரையில் ஏதும் முடிவு செய்யப்படவில்லை.

மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் வாகன நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு எளிதாக நிலையத்திற்கு செல்லும் வகையில் மின்தூக்கி, 2 சாய்தள பா

Tags : Central Metro Station ,
× RELATED சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில்...