×

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலத்தில் ஊராட்சி துணைத்தலைவர்கள் 53 பேர் போட்டியின்றி தேர்வு

உடுமலை, ஜன.13: உடுமலை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகளில் நடந்த துணைத்தலைவர் தேர்தலில் 28 ஊராட்சிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 10 ஊராட்சிகளில் தேர்தல் நடந்தது.மடத்துக்குளம் ஒன்றியத்தில், 11 ஊராட்சிகளுக்கு நடந்த துணைத்தலைவர் தேர்தலில் 9 ஊராட்சிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 2 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. குடிமங்கலம் ஒன்றியத்தில், 23 ஊராட்சிகளுக்கு நடந்த துணைத்தலைவர் தேர்தலில், 16 ஊராட்சிகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 7 ஊராட்சிகளில் தேர்தல் நடந்தது.மூன்று ஒன்றியங்களிலும் உள்ள 72 ஊராட்சிகளில், 53 ஊராட்சிகளில் துணைத்தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 19 ஊராட்சிகளில் நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Tags : panchayat vice-presidents ,
× RELATED ஊராட்சி துணை தலைவர்கள் கூட்டமைப்பு...