×

வாடிப்பட்டியில் ஒன்றிய குழு தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு: அதிமுக.வினர் சாலை மறியல்

வாடிப்பட்டி, ஜன.12: வாடிப்பட்டி ஒன்றியத்தில் 14 ஒன்றிய கவுன்சிலரில் அதிமுக சார்பில் 7 பேரும், திமுக சார்பில் 6 பேரும் சுயேட்சையாக ஒருவரும் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற இருந்தது. இதில் அதிமுக.வை சேர்ந்த 6 ஒன்றிய கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலர் மட்டும் பங்கேற்றனர். ஆனால் தேர்தல் நடத்த 8 கவுன்சிலர்கள் கட்டாயம் தேவை என்ற தேர்தல் விதி உள்ளதால் தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவினர் அதிகாரிகளைடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து பலத்தப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் அதிமுக.வினரிடம் தேர்தல் விதிமுறை படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமரசம் செய்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

Tags : union leader ,AIADMK.Viner ,
× RELATED கொடுமையான நடைபயணம் அரசின்...