×

கொடுமையான நடைபயணம் அரசின் கையாலாகாத்தனம்: சவுந்தரராசன், சிஐடியு தொழிற்சங்க தலைவர்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை, உணவு, குடும்ப பாதுகாப்பு போன்றவை எதுவும் இல்லாமல் நிராதரவான நிலைக்கு லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் என்கிற புலம் தொழிலாளர்கள் கடந்த 50 நாட்களாக தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் சில ஆயிரம் தொழிலாளர்கள், குடும்பத்தினர் மட்டுமே மத்திய அரசு மே 3ம் தேதி அளித்த வழிகாட்டி நெறிமுறைகளின்படி சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு அனுமதி அளித்தது. அதனால் சில ஆயிரம் பேர் சிறப்பு ரயில்களில் சென்றனர். ஆனால் பல லட்சம் தொழிலாளர்கள் இன்னும் தமிழகத்தில் உணவு, வேலை, சுகாதாரமற்ற சூழலில் சொந்த மாநிலத்துக்கு செல்ல காத்திருக்கின்றனர்.

ஒரு சிலர் மத்திய, மாநில அரசுகளை நம்பியே இருக்காமல் நடந்தும், மிதிவண்டிகளிலும் செல்கின்றனர்.  இது போன்று  வேறு மாநிலங்களில் நடந்து சொல்வோர் விபத்துகளில் சிக்கி இறக்கின்றனர் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் தன்னுடைய சொந்த ஊரை விட்டு வந்து தமிழகத்தில் உற்பத்தி மற்றும் சேவை துறையில் ஈடுபடுகின்றனர். அதனால் ஏற்படுகிற உற்பத்தி வளர்ச்சி, ஜிடிபி, எங்களுடைய நாடு முன்னேறுகிறது என்று கூறி மார்பை தட்டிக் கொள்ள மட்டும் தான் அந்த ஆட்சி இருக்கிறது.  

டிவியில், தொலைக்காட்சியில் காட்டுவது 10ல் ஒருத்தருக்கு செய்வது தான். மீதி 9 பேர் கடுமையான கஷ்டத்தில் இந்தியா முழுவதும் இருக்கின்றனர். அதனால் உடனடியாக அவர்களை ஊருக்கு அனுப்புவதற்கு பஸ், ரயில்கள் மூலம் விசேஷ ஏற்பாடு செய்து அனுப்பியிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இங்கே இருக்கிறவர்களை இங்கே வைக்கிறது என்பது முதலாளிக்கு சாதமாக கொத்தடிமைகளை உருவாக்கக் கூடிய ஏற்பாடு இதை அரசு செய்யக் கூடாது.  

மத்திய அரசு கணக்குபடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 8 கோடி. இப்போது 1 கோடி பேர் தான் அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை எப்போது அனுப்பி முடிப்பீர்கள். எனவே இருக்கிற ரயில்களை கூடுதல் நேரம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், தனியார் வாகனங்களை பயன்படுத்தி அவர்களை ஊர்களுக்கு அனுப்பியிருக்க வேண்டும். மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7500 வீதம் 6 மாதத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பழைய நிலைக்கு திரும்பவே முடியாது.

புலம்ெபயர்ந்து வந்திருக்க கூடிய தொழிலாளர்கள் அரசு கூறக்கூடிய இடத்தில் வந்து கூறினால் அவர்களுக்கு ரூ.7500 முதலாளிகளிடம் வாங்கி கொடுக்கட்டும் அல்லது முதலாளிகளுக்கு பதிலாக இவர்கள் மானியமாக கொடுத்தாலும் பரவாயில்லை. இதை கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு இந்த நிவாரணத்தை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்த கொடுமையான நடைபயணம் என்பது அரசின் கையாளாகாத்தனம், அரசின் மீது நம்பிக்கையின்மை, அரசுக்கு எதிரான நடைபயணமாக தான் இதை பார்க்க வேண்டும். மாநில அரசு பக்கத்து மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதற்கு கூட நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழ்நாட்டில் 22 ஆயிரம் பேருந்துகள் உள்ளது.

எனவே அரசு பேருந்து, தனியார் பேருந்து, ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தி சமூக இடைவெளியுடன், கட்டுப்பாட்டுடன் நோய் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் அனுப்பி வைத்திருக்க வேண்டும். பல மாநிலங்களில் பேருந்துகளுக்கு சானிடைசர் அடித்து தான் அனுப்புகின்றனர். தமிழ்நாட்டில் 22 ஆயிரம் அரசு பேருந்துகள், 20 ஆயிரம் தனியார் பேருந்துகள் என 40 ஆயிரம் பேருந்துகளை பயன்படுத்தி அனுப்பியிருக்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாதம் ₹7500 வீதம் 6 மாதத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பழைய நிலைக்கு திரும்பவே முடியாது.



Tags : union leader ,state ,CITU ,Government , Corona Virus, Interfaith, Soundararasan, CITU trade union leader
× RELATED அதானிக்கு பினாமி மோடி, மோடிக்கு பினாமி...