×

வெள்ளக்கல் குப்பை கிடங்கில் பற்றியது தீ

 

திருப்பரங்குன்றம, மே 8: திருப்பரங்குன்றம் அருகே பெருங்குடி செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல்லில் மதுரை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த குப்பை சேகரிக்கும் மையம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில் கடும் வெயிலின் காரணமாக நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்ததும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

குப்பைகள் என்பதால் ஒரு பக்கம் தீயை அணைக்கும் போது வேறு பகுதியில் தீ மளமளவென பரவியது. மேலும் கரும்புகையுடன் தீ எரிந்ததால் தீயை அணைக்க கூடுதலாக பெரியார், அனுப்பானடி ஆகிய இடங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. பின்னர் சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

The post வெள்ளக்கல் குப்பை கிடங்கில் பற்றியது தீ appeared first on Dinakaran.

Tags : Vellakal ,Tiruparangunram ,Garbage Collection Center ,Madurai Corporation ,Vellakalli ,Perungudi ,Vellakkal ,Dinakaran ,
× RELATED வெள்ளக்கல் குப்பை கிடங்கு புகையால் பொதுமக்கள் அவதி