×

தஞ்சை மாவட்டத்தில் 12 ஒன்றியக்குழு தலைவர் பதவி திமுகவினர் கைப்பற்றினர்

தஞ்சை, ஜன. 12: தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 12 ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. ஒரே ஒரு இடம் அதிமுக விற்கு கிடைத்தது.
தஞ்சை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்த மறைமுக தேர்தலில் திமுக வைச் சேர்ந்த 24வது வார்டு உறுப்பினர் வைஜெயந்திமாலா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 27வது வார்டு அதிமுக வேட்பாளர் பாலசித்ரா 11 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஒன்றிய துணை தலைவராக அருளானந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேபோல் அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் திமுக வை சேர்ந்த 7வது வார்டு உறுப்பினர் கலைச்செல்வன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஒரத்தநாட்டில் திமுக வின் 16வது வார்டு உறுப்பினர் பார்வதி சிவகங்கர் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றார். பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் திமுக 4வது வார்டு உறுப்பினர் பழனிவேல், திருவோணம் ஒன்றியத்தில் திமுக 5வது வார்டு உறுப்பினர் செல்லம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் திமுக 8வது வார்டு உறுப்பினர் முத்துமாணிக்கம், பூதலூர் ஒன்றியத்தில் திமுக 10வது வார்டு உறுப்பினர் அரங்கநாதன், திருவையாறு ஒன்றியத்தில் திமுக 7வது வார்டு உறுப்பினர் அரசாபகரன், பாபநாசம் ஒன்றியத்தில் திமுக 5வது வார்டு உறுப்பினர் சுமதி, கும்பகோணம் ஒன்றியத்தில் திமுக 21வது வார்டு காயத்ரி, திருவிடைமருதூர் ஒன்றியத்தில் திமுக 21வது வார்டு சுபா, திருப்பனந்தாள் ஒன்றியத்தில் திமுக 12வது வார்டு தேவி ரவிச்சந்திரன் ஆகியோர் ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மதுக்கூர் ஒன்றிய தலைவராக அதிமுக 13வது வார்டு உறுப்பினர் அமுதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பேராவூரணி ஒன்றியத்தில் போதிய உறுப்பினர் வருகை இல்லாததால் தலைவர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம் ஒன்றிய துணை தலைவராக முத்துலட்சுமி, பட்டுக்கோட்டை ஒன்றிய துணை தலைவராக முருகானந்தம், திருவையாறு ஒன்றிய துணை தலைவராக சக்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags : DMK ,takeover ,district ,Tanjore ,union committee chief ,
× RELATED விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகள்...