×

திருவையாறு பகுதியில் பள்ளிவாசல்களில் பக்ரீத் தொழுகை

 

திருவையாறு, ஜுன் 18: திருவையாறு பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த நடுக்கடை முகமது பந்தர், கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஹஜ்ரத்கள், இமாம்கள் தொழுகையை நடத்தி வைத்தார். இதில் பள்ளிவாசல் ஜமாத் தலைவர்கள், நிர்வாகிகள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்தி ஒவ்வொருவரும் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

The post திருவையாறு பகுதியில் பள்ளிவாசல்களில் பக்ரீத் தொழுகை appeared first on Dinakaran.

Tags : Bakrit ,Thiruvaiyaru ,Muslims ,Thanjavur district ,Nadukadai Mohammad Bandar ,Kandiyur ,Tirupoondurthi ,
× RELATED மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை...