×

சென்னிமலையில் தி.மு.க தலைவர் பதவியை பிடித்தது

சென்னிமலை, ஜன. 12: சென்னிமலை ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளது. இதில் தி.மு.க 7 இடங்களிலும், அ.தி.மு.க 5 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களையும் பிடித்தனர். ஒன்றிய தலைவர் பதவிக்கு வேட்பாளராக தி.மு.க.வை சேர்ந்த காயத்ரி இளங்கோ போட்டியிட்டார். சுயேட்சை மற்றும் தி.மு.க வேட்பாளர்களின் 9 வாக்குகளை பெற்று காயத்திரி வெற்றி பெற்றார். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட பானு கோபால் 3 வாக்குகளையும், அ.தி.மு.க.வினர் 2 செல்லாத வாக்குகளை அளித்ததால் பானுகோபால் வெற்றி வாய்ப்பை இழந்தார். மேலும் துணைத்தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார்.

Tags : DMK ,Chennimalai ,
× RELATED சென்னிமலை அருகே கொடுமணல் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு