×

பெருந்துறை ஒன்றிய தலைவர் பதவியை அ.தி.மு.க. பிடித்தது

பெருந்துறை, ஜன. 12:   ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்தில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளது. இதில் அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், சுயேட்சைகள் 4 வார்டுகளிலும், தி.மு.க. 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. நேற்று பெருந்துறை ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் பதவிக்கு  மறைமுக தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. உறுப்பினர்கள் மூன்று பேரும் கூட்டத்தில் கலந்துகொண்டு வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு தேர்தலை புறக்கணித்து வெளியேறினர். இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் சாந்தி 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட சண்முகப்பிரியா நான்கு வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். மாலையில் நடந்த துணைத்தலைவர் தேர்தலிலும் தி.மு.க.வினர் புறக்கணிப்பு செய்தனர். இதிலும் அ.தி.மு.க.வை சார்ந்த உமா மகேஸ்வரன் 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேட்சையாக போட்டியிட்ட பழனிச்சாமி 4 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.

Tags : AIADMK ,President ,
× RELATED அதிமுகவை குறிவைக்கும் கொரோனா: அதிமுக...