×

பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரி போராட்டம்

ஈரோடு, ஜன. 12:  பெருந்துறையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபடுவது என ஏ.ஐ.டி.யு.சி கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
 பெருந்துறை ஒன்றிய ஏ.ஐ.டி.யு.சி சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் பெருந்துறை ஜீவா இல்லத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நிர்வாகி ஜெயபாரதி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் சின்னசாமி, இ.கம்யூ. நகர செயலாளர் அருணாசலம், பாபு, சண்முகம், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பெருந்துறை நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காகவும், மின்சார கேபிள் அமைப்பதற்காகவும் தோண்டப்பட்டது. மேலும் மிகவும் பழுதடைந்துள்ள பழைய பஸ் நிலைய ரோடு, குன்னத்தூர் ரோடு, கோவை மெயின் ரோடு, ராஜ வீதி, சென்னியவலசு ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறுகளை ஏற்படுத்தி வரும் இச்சாலைகளை செப்பனிடக்கோரி பொது மக்களை திரட்டி வரும் 20ம் தேதி பெருந்துறை அண்ணா சிலை அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, பொதுமக்கள் நலனுக்காக நடக்க உள்ள இப்பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பொதுநல அமைப்புகளும், அனைத்து பகுதி பொதுமக்களும் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி