×

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,  ஜன. 12:  ஈரோடு காளைமாடு சிலை அருகில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்  கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட  தலைவர் லூர்துபெலிக்ஸ் ஸ்டீபன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம்  முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் முருகன் கலந்து  கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார். இதில், தமிழக அரசு 5,8ம்  வகுப்புகளுக்கு அறிவித்துள்ள பொதுதேர்வினால் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு  பயத்தையும், இடைநிற்றலையும் அதிகரிக்கும் என்பதால் இத்திட்டத்தை அரசு கைவிட  வேண்டும். தேசிய கல்விக்கொள்கை-2019 கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கூடிய  நடவடிக்கை என்பதால், மத்திய அரசு இந்த கல்விக்கொள்கையை திரும்ப பெற  வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தங்களது  உரிமைகளுக்கான போராடிய பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அரசு  ஊழியர்கள் மீது மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு உடடினயாக திரும்ப  பெற வேண்டும்.
 மேலும் பள்ளி தொடர்பான அனைத்து புள்ளி விவரங்களையும் கல்வியியல்  மேலாண்மை தகவல் மையம் (எமிஸ்) இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வட்டார அளவில்  ஊழியர் ஒருவரை அரசு நியமிக்க வேண்டும். தொடக்கல்வித்துறையில் குழப்பதை  ஏற்படுத்தி வரும் அரசாணை எண்கள் 145, 202 ஆகியவற்றை அரசு திரும்ப பெற  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆரம்பப்பள்ளி  ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Primary school teachers ,elections ,
× RELATED தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா