×

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

கிருஷ்ணகிரி, ஜன.12: கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் உள்ள 23 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த  தேர்தலில், திமுக 12 இடங்களையும், அதிமுக 7  இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களையும், பாமக ஒரு இடத்தையும் கைப்பற்றியது. நேற்று காலை 11 மணியளவில் மாவட்ட ஊராட்சி  அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் பிரபாகர் முன்னிலையில் மறைமுக வாக்குப்பதிவு நடைபெற்றது. தலைவர் பதவிக்கு திமுக சார்பில் 18வது வார்டு உறுப்பினர் மணிமேகலை நாகராஜன், அதிமுக  சார்பில் 12வது உறுப்பினர் ஜெயா ஆகியோர் போட்டியிட்டனர். இதில், மணிமேகலை நாகராஜன் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஜெயா 7 வாக்குகள் பெற்றார். திமுக கூட்டணி 15 இடங்களை பிடித்திருந்த நிலையில், அதிமுக கூட்டணியைச் சேர்ந்த ஒருவர் திமுகவிற்கு ஆதரவாக வாக்குளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், துணை தலைவர் பதவிக்கு 8வது வார்டு உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த  ஷேக்ரஷீத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இருவரும் பதவியேற்றுக்கொண்டனர்.

Tags : DMK ,chairmanship ,district panchayat committee ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி