×

பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கல்

கடையம், ஜன. 10:  தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று தொடங்கியது. கடையத்தில் ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்து பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள், ரூ.1000 வழங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் வீரபாண்டியன், பாசறை செயலாளர் சேர்மபாண்டி, ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜன், பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் வடிவேல் முருகன், முன்னாள் கவுன்சிலர்கள் புளி கணேசன், மகாலிங்கம், ராமதுரை, ராஜவேல், சவுந்திராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கரன்கோவிலில் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்களின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில் நெல்லை கூட்டுறவு பேரங்காடி இணை இயக்குநர் லுசாமி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கினார். கூட்டுறவு விற்பனை சங்கங்களின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை அதன் தலைவர் ராமநாதன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், நகராட்சி முன்னாள் கவுன்சிலர் குமாரவேல், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் கணபதி, வக்கீல் மாரியப்பன், சுப்பிரமணியன், மாரிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலகரம் பேரூராட்சி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடையில், நெல்லை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் இலஞ்சி சண்முகசுந்தரம் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கினார்.மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் வெள்ளத்துரைச்சி, இயக்குநர்கள் டேனிஅருள்சிங், பிரபாகர், செல்வக்குமார், ராஜா, முன்னிலை வகித்தனர். அரசு வழக்கறிஞர் வக்கீல் கார்த்திக்குமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் நெல்லை முகிலன், வார்டு செயலாளர்கள் செல்வராஜ், ராஜா மற்றும் குமாரவேல், முருகையா, ஆறுமுகம், ராமசாமி, பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் குலசேகரன், விற்பனையாளர்கள் மாரிமுத்து, கண்ணகி ஆகியோர் செய்திருந்தனர்.

குற்றாலம் பஸ் நிலையம் அருகிலுள்ள ரேஷன் கடையில் தென்காசி குற்றாலம் கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். குற்றாலம் பேரூர் செயலாளர் அசோக் பாண்டியன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஜெ. பேரவை செயலாளர் சாலுக்குட்டி பாண்டியன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி ஜெயக்குமார், எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜமால், மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் குமாரசாமி, வார்டு செயலாளர் செயலாளர் சின்னத்தம்பி, சுடலைமுத்து, மேலவை பிரதிநிதி பிச்சையா, பெரியபிள்ளைவலசை முன்னாள் கிளை செயலாளர் வேம்பு என்ற ரவி, முருகன், ஆத்ம ராவ், பால்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலஅம்பை, சுப்பிரமணியபுரம் அமுதம் நியாய விலை கடை மற்றும் ஊர்க்காடு கூட்டுறவு சிறப்பு சிற்றங்காடி நியாய விலை கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு சிவில் சப்ளை தாசில்தார் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். தாசில்தார் கந்தப்பன் முன்னிலை வகித்தார். சப்-கலெக்டர் பிரதீக் தயாள், பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள், ரூ.1000 மற்றும் இலவச வேட்டி, சேலைகளை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலார் வெங்கட்ராமன், ஆர்ஐ முருகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், அதிமுக அம்பை நகர செயலாளர் அறிவழகன், துணை செயலாளர் மதன், மாவட்ட பிரதிநிதி சுடலை, அவைத்தலைவர் பழனி, கணேசன், பாலா, சண்மு, மாரியப்பன், அருணாசலம், அலியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுரண்டை சிவகுருநாதபுரம், சங்கரன்கோவில் சாலையில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் சுரண்டை பேரூர் அதிமுக செயலாளர் சக்திவேல், சிவகுருநாதபுரம் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஜெயபால் ஆகியோர் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சியில் ஆலங்குளம் கூட்டுறவு சார்பதிவாளர் கோபிநாத், கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் சரவணக்குமார், துணை தலைவர் கணேசன், கூட்டுறவு பண்டகசாலை இயக்குநர்கள்ஆறுமுகம் என்கிற சமுத்திரம், சங்கர், சங்கரேஸ்வரன், அண்ணாமலை, முத்து, தேனம்மாள் தங்கராஜ், வசந்தி, ராதிகா, மாரியப்பன், பாஜ தலைவர் முருகேசன், தேமுதிக தலைவர் சேர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாங்குநேரி மற்றும் ராதாபுரம் தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், வள்ளியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. சங்க தலைவர் முருகேசன் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். அதிமுக ஒன்றிய செயலாளர் அழகானந்தம் தலைமை வகித்தார்.நகர செயலாளர் பொன்னரசு, ராதாபுரம் தாசில்தார் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க துணை தலைவர் செழியன் வரவேற்றார். விழாவில் சங்க மேலாளர் தமிழ்செல்வன், சண்முகபாண்டி, வென்னிமலை, எட்வர்ட்சிங், முருகேசன், கந்தன், சுப்பிரமணி, நேவிசன் லியோ, சங்கரலிங்கம், பொன்செல்வன், இசக்கியப்பன், உட்பட பலர் கலந்துகொண்டனர். இளைஞர் பாசறை செயலளார் கருப்பசாமி, 17வது வார்டு உறுப்பினர் அருண்குமார் ஆகியோர் நன்றி கூறினர். கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை வங்கி ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு அதிமுக நகர செயலாளர் கிட்டுராஜா தலைமை வகித்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் புகழேந்தி, மாரியப்பன், அப்துல் ஜப்பார், குருசாமி, நாகூர் மீரான், சத்யா மாரியப்பன், ஐவர் குலராஜா, ராஜேந்திர பிரசாத், வெங்கட நடராஜ், மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED குண்டாசில் இருவர் கைது