×

ஐஐடி கேட் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஊழியர்கள் பொதுமக்கள் கடும்அவதி: பேரவையில் வாகை சந்திரசேகர் எம்எல்ஏ பேச்சு


சென்னை, ஜன.10: சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் (திமுக) பேசியதாவது: சென்னை நகரில் ஐஐடி உயர்கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஐஐடி நிர்வாகம் தற்போது எடுத்துள்ள ஒரு நடவடிக்கை வேளச்சேரி மக்கள் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஐஐடி வளாகத்திற்கு பிரதான நுழைவாயில் தவிர 3 பகுதிகளிலும் 3 சிறிய கேட் உள்ளது.

அதில் ஒன்று வேளச்சேரி தொகுதியில் 179வது வார்டு காந்தி சாலையில் அமைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் இதை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 24.12.19 அன்று ஐஐடி நிர்வாகம் இந்த கேட்டை அகற்றிவிட்டு, தடுப்புச்சுவர் எழுப்பி உள்ளனர். இதனால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், உதவித்தொகை மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு 3 கிலோ மீட்டர் சுற்றி உள்ளே வர வேண்டியது உள்ளது. மேலும், ஐஐடி வளாகத்தில் உள்ள 2 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, மீண்டும் காந்தி சாலையில் உள்ள கேட்டை திறந்து, மக்களின் சமூகம் சார்ந்த வேதனைக்கான தடுப்பு சுவரை அகற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “உயர்கல்வித்துறை அமைச்சரும், நானும் அவர்களோடு பேசி, மத்திய அரசிடமிருந்து அதை உடனடியாக திறக்க உத்தரவை பெறுவதற்கு முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்” என்றார்.

Tags : civilians ,shutdown ,IIT ,
× RELATED புதுமை கண்டுபிடிப்புகளை உருவாக்க...