×

குண்டல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சீர்கேடு

தர்மபுரி, ஜன.9: தர்மபுரி குண்டல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி அடுத்த குண்டல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் கல்லுரிகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோழிக்கடைக்காரர்கள் கோழி இறகுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை குண்டல்பட்டி நெடுஞ்சாலையில் கொட்டி செல்கின்றனர். தேங்கி கிடக்கும் கோழி கழிவுகளால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த குண்டல்பட்டி பொதுமக்கள் கூறுகையில், ‘பழைய தர்மபுரி அருகே குண்டல்பட்டி நெடுஞ்சாலையில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், நகரின் பல பகுதிகளில் இருந்தும் கோழி கழிவுகள், முட்டை ஓடுகளை இங்கு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் தேங்கி கிடக்கும் கோழிக்கழிவுகள் காற்றில் பறந்து ரோட்டில் செல்பவர்களின் மேல் விழுகிறது. மேலும், இறைச்சி கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இறைச்சி கழிவுகளை கொட்டுவதற்கு, அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும்,’ என்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா