×

வெவ்வேறு விபத்தில் விவசாயி, வாலிபர் பலி

தேன்கனிக்கோட்டை, ஜன.9:  கர்நாடக மாநிலம் பெங்களூரு சாமண்ணா நகரைச் சேர்ந்தவர் அபூபக்கர் மகன் தன்வீர்கான்(23). இவர் நேற்று முன்தினம் இரவு, டூவீலரில் தேன்கனிக்கோட்டையில் இருந்து பெங்களூரு சென்றார். பேகரை கிராமத்தின் அருகே, முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது, எதிரே வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தன்வீர்கான், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கெலமங்கலம் எஸ்ஐ செல்வராகவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார்.அதேபோல், கெலமங்கலம் அருகே நீலகிரி கிராமத்தை சேர்ந்தவர் சாதநல்லப்பா(45), விவசாயி. இவர் நேற்று மதியம், தனது டூவீலரில் கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையில் வெள்ளிச்சந்தை கிராமம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வேகமாக வந்த டெம்போ, இவரது டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த  சாதநல்லப்பா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி ரேணுகா அளித்த புகாரின் பேரில், கெலமங்கலம் எஸ்ஐ சிவலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

ஏரியூர் ஒன்றியத்தில் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு கலெக்டரிடம் மனுதர்மபுரி, ஜன.9: ஏரியூர் ஒன்றிய கவுன்சிலர் 4வது வார்டுக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏரியூர் ராமகொண்டஅள்ளி புதுசாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் (52). இவர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் ஏரியூர் ஒன்றிய கவுன்சிலர் 4வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டேன். கடந்த 30ம் தேதி தேர்தல் நடந்தது. கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. எனக்கு பதிவான வாக்குகள் சரியாக எண்ணவில்லை என தெரியவந்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது, எனக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் வெளியே சென்றிருந்தேன். மீண்டும் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட சென்றபோது, உள்ளே செல்ல அனுமதி அளிக்கவில்லை. எனவே, 4வது வார்டு வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்தவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : plaintiff ,accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...