×

ஊராட்சி ஒன்றியங்களில் துணைத்தலைவர் பதவி கூடுதல் இடம் கிடைக்க தி.மு.க.வுக்கு வாய்ப்பு

ஈரோடு, ஜன. 9: ஊராட்சி ஒன்றியங்களில் துணைத்தலைவர் பதவிகளை கூடுதல் இடங்களில் பெறுவதற்கான வாய்ப்பு தி.மு.க.வுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. ஈரோடு மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், 14 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் 225 ஊராட்சி துணைத் தலைவர்களுக்கான தேர்தல் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. இதில், மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளை அ.தி.மு.க. கைப்பற்றும் நிலை உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க. பெரும்பான்மை எண்ணிக்கைக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளை கைப்பற்றி உள்ளதால் 9 ஒன்றியக்குழுத் தலைவர், பதவிகளை பிடிக்க வாய்ப்புள்ளது. தி.மு.க. 5 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதன்மூலம், ஈரோடு, கோபி, அம்மாபேட்டை, நம்பியூர், பவானி, மொடக்குறிச்சி, பவானிசாகர், அந்தியூர், பெருந்துறை ஆகிய 8 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை அ.தி.மு.க. கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதேபோல், கொடுமுடி, சத்தியமங்கலம், தூக்கநாயக்கன்பாளையம், சென்னிமலை, தாளவாடி ஆகிய 5 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை தி.மு.க. எளிதில் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே, அம்மாபேட்டை, அந்தியூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் துணைத்தலைவர் பதவிகளை கூட்டணி கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துவதால் 9 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு 2 துணைத்தலைவர் பதவிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.ஆனால், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை கைப்பற்ற உள்ள தி.மு.க.வுக்கு ஈரோடு உள்ளிட்ட 3 ஊராட்சி ஒன்றியங்களில் துணைத்தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும், இதற்காக சுயேட்சைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால் 5 தலைவர் பதவிகள், 8 துணைத்தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : DMC ,
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4ல்...