×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசி, ஜன. 9:  தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை  நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களின் வருமானவரி  உச்சவரம்பை ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்  கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர், எம்ஆர்பி செவிலியர்கள் மற்றும்  தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் மருத்துவமனை பணியாளர்கள்  உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்காசியில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொது சுகாதாரத்துறை  அலுவலர் சங்கம் கங்காதரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரைசிங்,  துணை தலைவர் ராஜசேகர், இணை செயலாளர் கோவில்பிச்சை, மாநில செயலாளர்  பிச்சைக்கனி, நெடுஞ்சாலைத்துறை வேல்ராஜன், ஊரக வளர்ச்சித்துறை  சுப்பிரமணியன், வருவாய் துறை மாடசாமி, தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சேகர்,  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ராஜ்குமார், மணிமாறப்பாண்டியன்,  பட்டுவளர்ச்சி துறை வெங்கடேஷ், சாலைப்பணியாளர் சங்கம் முஸ்தபா,  சமூக நலத்துறை பிரகாஷ் ஆகியோர் பேசினர். ரகுபதி நன்றி கூறினார்.

Tags : Government employees ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்