×

ரயில் நிலையம் முன்பு மத்திய அரசின் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன.8: மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, சிஐடியூ, டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கங்கள், தோழமை சங்கங்களுடன் இணைந்து மதுரை ரயில் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
மதுரை சிஐடியூ தட்சிணா ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் மற்றும் ஏஐஜிசி, ஏஐஎல்ஆர்எஸ்ஏ, ஏஐஆர்சிசிஏ, ஏஐஎஸ்எம்ஏ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் ரயில்வே துறையின் போக்கை கண்டித்து, மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், சம வேலைக்கு-சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், பொதுத்துறை சொத்துக்களை கார்ப்ரேட்டுகளிடம் தாரைவார்க்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும்

 என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று பொய்யான பிரசாரம் செய்து ஆட்சியை பிடித்த மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு ெதரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மத்திய அரசை கண்டித்தும், ரயில்வே வாரியத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்து, இன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு, டிஆர்இயு மதுரை கோட்ட உதவி செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். கோட்டத்தலைவர் பவுலின், கோட்டச் செயலாளர் சங்கரநாராயணன் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கார்த்திக், சிவக்குமார், ராஜசேகரன், பிரபு டேவிட் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

Tags : Railway station protests ,government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...