×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மஸ்ஜிஸ்துகள் கூட்டமைப்பினர் பேரணி: பெரம்பூரில் நடைபெற்றது

பெரம்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பூர் சுற்று வட்டார மஸ்ஜிஸ்துகளின் கூட்டமைப்பு சார்பில், மாபெரும் பேரணி பெரம்பூரில் நேற்று நடந்தது. பெரம்பூர் பேப்பர் மில் சாலை காந்தி சிலையில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், இந்த சட்டத்தை திரும்ப வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், சுமார் 100 மீட்டர் நீளமுள்ள பிரமாண்ட தேசிய கொடியை கையில் ஏந்தியபடி சென்றனர்.

பின்னர் அங்குள்ள முரசொலிமாறன் பூங்கா அருகே வந்தபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடைபெற்ற கண்டன உரையில் முகமது யூசுப் ரசாத், அன்வர் பாஷா, அகமது இப்ராஹிம் ஆகியோர் கண்டன உரையாற்றினார். பேரணியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், பெரம்பூர் நிஜார், கொடுங்கை நஸ்ருதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அசம்பாவிதவங்களை தவிர்க்க புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி கமிஷனர்கள் ஜெய்சிங், சுரேந்திரன் மற்றம் 10க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

Tags : rally marches ,Perambur ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது