சென்னை: அதிமுகவினரை பழிவாங்க திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறையை பயன்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். பதவியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினரை பணி செய்ய விடாமல் தடுக்கவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு அதிமுக பயப்படாது என்றும் அதிமுகவினரையும், முன்னாள் அமைச்சர்களையும் பயமுறுத்தலாம் என நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது என்றும் கூறினார். உள்ளாட்சி தேர்தலுக்காக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜெயகுமாருக்கு அமைச்சர் சக்ரபாணி பதிலளித்துள்ளார். கோவை பீளமேட்டில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கே.சி.வீரமணி மீது புகார்கள் வந்திருக்கும், அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படும் என்றார். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் சக்ரபாணி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுகவினர் தான் வலியுறுத்துகின்றனர் என்றும் பதிலடி கொடுத்தார். …
The post ‘உள்ளாட்சி தேர்தலில் பணிசெய்ய விடாமல் தடுக்கும் சதி’!: நாங்க எதையும் சந்திப்போம்..கே.சி.வீரமணி வீட்டில் நடக்கும் ரெய்டு பற்றி ஜெயக்குமார் கருத்து..!! appeared first on Dinakaran.