×

தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவி ஏற்பு விழா

தர்மபுரி, ஜன.7: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் 188 வார்டு உறுப்பினர் பதவிக்கான உள்ளாட்சி தேர்தல், கடந்த 27ம் தேதி மற்றும் 30ம் தேதி நடந்தது. இதில் அதிமுக -64, திமுக- 53, பாமக- 37, தேமுதிக- 7, சிபிஎம் -3, அமமுக -2, விசிக -2, சுயேட்சை-20 வெற்றி பெற்றனர். இவர்களுக்கான பதவியேற்கும் நிகழ்ச்சி, நேற்று தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரிகள் ஜெயபால், ஆறுமுகம், ரவிச்சந்திரன் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். தர்மபுரி ஒன்றியத்தில் 24 ஒன்றிய உறுப்பினர்களும் பதவியேற்றனர். திமுக சார்பில் இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த சாந்தி காவேரி, மாங்கனி செல்வராஜ், கிருஷ்ணாபுரம் ராஜலிங்கம், புழுதிகரை மகாலிங்கம் ஆகியோரும் பதவியேற்றனர்.

அப்போது, தனித்தனியாக பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு பதிலாக, திமுகவினருக்கும் மட்டும் ஒரே சமயத்தில் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். தனித்தனியாக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். பேசுவதற்கு மைக் இல்லை, ஒலிபெருக்கி இல்லை என்று திமுக நிர்வாகி காவேரி புகார் தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து திமுகவினருக்கு தனித்தனியாக பதவி பிரமாணம் செய்து வைத்தனர். அதன்பின் 24 வார்டு கவுன்சிலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags : Adoption ceremony ,Dharmapuri Panchayat Union ,office ,
× RELATED மின்மாற்றி வெடித்ததில் ஊழியர்...