×

கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

கடலூர், ஜன. 7:  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி கடலூர் மாவட்ட கோயில்களில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது. கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர். இதுபோன்று கடலூர் வில்வ நகரில் உள்ள ஆட்கொண்ட வரதராஜபெருமாள் கோயில், சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோயில், திருப்பாதிரிப்புலியூர் கோயில், புதுப்பாளையத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு தரிசனத்தில் வழிபட்டனர். மேலும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோயில் மற்றும் வெங்கடாஜலபதி கோயிலில்  சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வெங்கடாஜலபதி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.  பின்னர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அலர்மேலு மங்கை தாயார் பிரசன்ன வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் தம்பதியர்களாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோல் காந்தி வீதியில் உள்ள வேணுகோபால சுவாமி, கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜபெருமாள், திருவதிகை சரநாராயணபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலையில் பணியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வந்திருந்தனர். கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வரதராஜபெருமாள் கோயிலில் வந்திருந்த பக்தர்களுக்கு லட்டுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல் பண்ருட்டியை சுற்றி உள்ள கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

Tags : Paradise openings ,temples ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு