×

காரிமங்கலம்- அகரம் சாலையில் எரியாத உயர்மின் கோபுர விளக்கு

காரிமங்கலம், ஜன.3: காரிமங்கலம்- அகரம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலைகள் உயர்மின் கோபுர விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காரிமங்கலம்- அகரம் பிரிவு தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் விபத்தை தடுக்கும் வகையில், உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த 20நாட்களாக உயர்மின் கோபுர விளக்கு எரியாமல் உள்ளது.இதனால், சாலையை கடக்க முயலும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நான்கு வழிச்சாலையை பராமரிக்கும் தனியார் நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகமும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல், பெரியாம்பட்டி பிரிவு சாலை, மாட்லாம்பட்டி - பைசுஅள்ளி பிரிவு சாலை பகுதியிலும், மின்விளக்குகள் இல்லை. எனவே, வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, உயர்கோபுர மின் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Karimamangalam- Agaram ,
× RELATED கோழிக்கோடு பீச் சாலையில் கார்...