×

சேலம் அருகே குடிபோதையில் வந்த வாக்காளர் மையை அழித்துவிட்டு வாக்களிப்பு மடக்கி பிடித்த தேர்தல் அதிகாரிகள்

சேலம், டிச.31:சேலம் அருகே குடிபோதையில் வந்த வாக்காளர், கையில் மை வைத்தவுடன் அதனை அழித்துவிட்டு வாக்களித்தார். அவரை அதிகாரிகள் மடக்கி பிடித்து, மீண்டும் மை வைத்து அனுப்பி வைத்தனர். சேலம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நீர்முள்ளிக்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 7 பூத்துக்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், காலை 11 மணியளவில் 6வது வார்டு பூத்திற்கு குடிபோதையில் ராமசாமி என்ற வாக்காளர் வந்தார். அவர் வாக்களிக்க வரிசையில் சென்றார். அவரது கை விரலில் அழியா மை வைக்கப்பட்டது. அந்த மை வைக்கப்பட்ட அடுத்தநொடி, அதனை அழித்துவிட்டு வாக்குச்சீட்டுக்களை வாங்கிச் சென்றார். அப்போது, பூட்டு சாவி சின்னத்தை காணோம் என  தான் கையில் வைத்திருந்த சீட்டை பார்த்துச் சொன்னார். உடனே அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சீட்டு தவிர மற்ற சீட்டுகளை வாங்கிக் கொண்டனர். பிறகு அவர், வாக்களித்து சீட்டுகளை பெட்டியில் போட்டார். வாக்குச்சாவடிக்குள் இருந்த முகவர்கள், வாக்காளர் ராமசாமி மையை அழித்தது பற்றி அதிகாரிகளிடம் கூறினர். உடனே அவரை மீண்டும் மை வைக்க அழைத்தனர். ஆனால் அவர், அங்கிருந்து வெளியேற முற்பட்டார். உடனே மடக்கி பிடித்த தேர்தல் அதிகாரிகள், அவரின் கை விரலில் மீண்டும் மை வைத்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Elections officials ,voter ,vandalism ,Salem ,
× RELATED நாடு முழுவதும் இதுவரை நடந்து முடிந்த 4...