×

இலக்கியம்பட்டியில் குப்பை தேக்கத்தால் தொற்றுநோய் அபாயம்

தர்மபுரி, டிச.31: இலக்கியம்பட்டி ஊராட்சி பிடமனேரியில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி இருப்பதால், தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பிடமனேரியில், செந்தில், நகர், கலெக்ட்ரேட், அழகாபுரி, ஹவுசிங்போர்டு குடியிருப்பு, ஏஆர் குவார்ட்டர்ஸ், கருவூலகாலனி, ரயில்வே கேட் பகுதி இந்திரா நகர் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இலக்கியம்பட்டி ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், தினமும் குப்பைகளை சேகரிக்க தூய்மை காவலர்கள் பணிக்கு சென்று சேகரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 15 நாட்களாக உள்ளாட்சி தேர்தல் பணியில், ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனால் கடந்த 10 நாட்களாக குப்பைகளை சேகரிக்க ஆட்கள் வராததால்,  பொதுமக்கள் ரோடுகளில் குப்பைகளை கொட்டி விடுகின்றனர். பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில்கு தொற்று ேநாய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : literature bar ,
× RELATED இலக்கியம்பட்டியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்