×

ஜனவரி 8ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் திரளாக பங்கேற்க முடிவு

ஈரோடு,டிச.30: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வட்டார பேரவை கூட்டம் ஈரோடு மாணிக்கம்பாளையம் பாரதி அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொருளாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மாநில துணைச் செயலாளரும், திருப்பூர் எம்.பி.யுமான சுப்பராயன், மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப  பெற வேண்டும். மத்திய பா.ஜ. அரசின் மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 8ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் சார்பில் திரளாக கலந்து கொள்வது.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடுகள் மோசமான நிலையில் உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும், மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் மகாலிங்கம், வட்டார செயலாளர் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து