×

மக்களின் பிரச்னைகளை தீர்க்காவிட்டால் போராட்டம் நடத்தி தீர்வு காண்போம்

ஈரோடு,டிச.30:  ஈரோட்டில் அனைத்து நாயுடு, நாயக்கர் அமைப்புகளின் சார்பில் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் தலைமை செயலாளருமான ராமமோகன் ராவ் கலந்து கொண்டு சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். முன்னதாக நிருபர்களிடம் கூறுகையில், அனைத்து நாயுடு, நாயக்கர் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் சமுதாயத்தில் உள்ள மக்களின் பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை கொடுத்து வருகிறோம். குறிப்பாக விவசாய பிரச்னைகள், வேலையில்லாத பிரச்னைகள் என பல பிரச்னைகள் உள்ளது. இந்த பிரச்னைகளை தீர்க்க அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.

நாங்கள் கொண்டு செல்லும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அந்த கோரிக்கையை நிறைவேற்ற தேவைப்பட்டால் போராட்டங்கள் நடத்துவோம்.எங்கள் சமுதாயம் மட்டுமின்றி மற்ற அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைக்கவுள்ளோம். தற்போது நாங்கள் சமுதாய பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவது, அரசியலில் ஈடுபடுவது குறித்து அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்பத்தான் முடிவு செய்யப்படும்.எங்கள் சமுதாய தலைவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதற்கேற்ப செயல்படுவோம். தற்போது நாங்கள் சமுதாய ரீதியாக அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள் குறித்து எதுவும் கூற முடியாது. இவ்வாறு ராம மோகன் ராவ் கூறினார்.

Tags :
× RELATED டாஸ்மாக் கடையை அகற்ற கலெக்டர் ஆபீசில் மனு