×

வாக்குச்சாவடிகளுக்கு சென்ற வாக்குப்பெட்டிகள்

உசிலம்பட்டி, டிச. 30: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி, டி.கல்லுப்பட்டி, யூனியன் அலுவலகங்களிலிருந்து லாரிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன. உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓ.சௌந்தர்யாக யூனியன் அலுவலகத்தில் இருந்த வாக்குப் பெட்டிகளை ஆய்வு செய்து வாக்குசாவடிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டார். அதனடிப்படையில் உசிலம்பட்டி ஒன்றியத்திலுள்ள 18 பஞ்சாயத்துக்களில் உள்ள 110 வாக்குச்சாவடிகளுக்கு 10 மண்டலமாக பிரித்து லாரிகளில் வாக்குப்பெட்டிகள் மற்றும் கூடுதல் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்தனர்.

ஒவ்வொரு மண்டல வாக்குப்பெட்டிகளை எடுத்து செல்லும் லாரிகளில் மண்டல அலுவலர் மற்றும் உதவியாளர், அலுவலக உதயாளர் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டது.இதேபோல் சேடபட்டி ஒன்றியத்தில் 31 பஞ்சாயத்துகளில் உள்ள 155 வாக்குச்சாவடிகளுக்கு 15 மண்டலமாக பிரித்து வாக்குப்பெட்டிகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. செல்லம்பட்டி ஒன்றியத்திலுள்ள 29 பஞ்சாயத்துக்களில் உள்ள 144 வாக்குச்சாவடிகளுக்கு 11 மண்டலமாக வாக்குப்பெட்டிகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. டி.கல்லுப்பட்டி ஒன்றியத்திலுள்ள 42 பஞ்சாயத்துக்களில் உள்ள 148 வாக்குசாவடிகளுக்கு 13 மண்டலமாக வாக்குப்பெட்டிகள் லாரிகளில் அனுப்பப்பட்டது.

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட நாள்
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கில் இடப்பட்ட நாள் இன்று. சதாம் உசேனின் முழுப்பெயர் சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி. இவர் 1937 ஏப்ரல் 28ம் தேதி பிறந்தார். இவர் ஈராக் நாட்டின் அதிபராக ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 7, 2005 வரை அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பு வரையில் பதவியில் இருந்தார். ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராக பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.
அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை நடத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. ஈரான் - ஈராக் போர் (1980-1988) மற்றும் குவைத் போர் (1991) நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டதாக புகார் உள்ளது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அரேபிய மக்கள் அவரை ஒரு பிரபல தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்  குழுக்கள் சதாமின் பாதுகாப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.

ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006ல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. டிசம்பர் 26, 2006ல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...